பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் கடந்த 27ஆம் தேதி வெளியான படம் ‘தாய் கிழவி’. இப்படத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஸ் காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், ரெய்ச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் பெண்களுடைய முன்னேற்றத்தை பற்றியும் அவர்களது வலிமையை பற்றியும் நன்றாக பேசியுள்ளதாக சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு ஒன்றாக கூடி கேக் வெட்டி கொண்டாடினர்.
இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் மூன்று நாட்களில் ரூ.22 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனைத் தொடர்ந்து 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மக்களின் வரவேற்பு படத்துக்கு இருப்பதால் மேலும் வசூல் அதிகரிக்கும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/09/359-2026-03-09-17-20-26.jpg)