Advertisment

விறுவிறுப்பு கூட்டியதா போலீஸின் தேடுதல்? - ‘தடயம்’ (வெப் சீரிஸ்) விமர்சனம்

17 (60)

இப்போதுள்ள காலகட்டத்தில் மர்டர் மிஸ்டரி வகை வெப்சீரிஸ்கள் மட்டுமே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. தற்பொழுது அந்த வரிசையில் இணைய இந்த தடயம் வெப் சீரிஸ் வெளியாகி இருக்கிறது. இது எந்த அளவு ரசிக்க வைத்திருக்கிறது..?

Advertisment

தமிழக ஆந்திரா எல்லையில் இருக்கும் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பல ஆண்டுகளாக சமுத்திரக்கனி பணிபுரிந்து வருகிறார். போலீஸ் வேலையே பிடிக்காமல் எப்பொழுதும் லெதாஜிக்காகவே இருக்கிறார். அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக ஷிவதா வருகிறார். வந்த இடத்தில் சமுத்திரகனி மேல் ஏகப்பட்ட புகார்கள். இதனால் ஷிவதாவின் பார்வை சமுத்திரகனி மேல் விழுகிறது. சமுத்திரகனியோ தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்க அந்த நேரம் பார்த்து அந்த ஊரில் ஒரே மாதிரியான பல்வேறு கொலைகள் அடங்கி இருக்கிறது.

Advertisment

எல்லா கொலைகளுக்கும் ஒரு ஹிண்ட் வைத்தது போல் சுவற்றில் கேள்விக்குறி வரைந்து விட்டு கொலையாளிகள் சென்று விடுகின்றனர். இதை துப்பு துலக்க ஷிவதா களம் இறக்கப்படுகிறார். கூடவே உதவிக்கு சமுத்திரகணியும் கோதாவில் குதிக்கிறார். இதற்கிடையே இதே போல் ஆந்திர மாநிலத்திலும் 76 கொலைகள் அரங்கேறி இருக்கின்றன. இதனால் மிகவும் அதிர்ச்சிக்குள்ளான போலீஸ் கொலையை இன்னும் வேகமாக துப்பு துலக்க ஆரம்பிக்கின்றனர். அந்த கொலைகளை செய்தது யார்? அந்த கொலைகளுக்கான காரணம் என்ன? அவர்கள் சுவற்றில் வரைந்து விட்டு சென்ற கேள்விக்குறிக்கான அர்த்தம் என்ன? இதை சமுத்திரக்கனி அண்ட் கோ கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பதே இந்த வெப்சீரிஸ்ன் மீதி கதை.

இந்த மாதிரியான மர்டர் மிஸ்டரி வகை போலீஸ் துப்பு துலக்கும் கதைகள் ஏராளமாக தமிழ் சினிமாவில் வந்திருக்கின்றன. அவைகள் பெரும்பான்மையான வெற்றி பெற்ற படங்களாகவே அமைந்திருக்கின்றன. இதனாலேயே இந்த மாதிரியான கதைக்களங்களுக்கு அதுவும் குறிப்பாக வெப் சீரிஸ்கள் அதிகமாக வர காரணமாக இருக்கிறது. அப்படியான ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதை சிறப்பான முறையில் நேர்த்தியாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் நவீன் குமார் பழனிவேல். பிரபல ஓடிடி தளமான ஜீ5-யில் வெளியாகி இருக்கும் இந்த சீரிஸ் சிறப்பான முறையில் விறுவிறுப்பாக அமைந்து பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறது.

நாம் ஏற்கனவே பார்த்து பழகிய கதைகளமாகவே இருந்தாலும் அதை சுவாரஸ்யமான முறையில் விறுவிறுப்பாக கொடுத்து இருப்பது இதற்கு பிளஸ்ஸாக அமைந்திருக்கிறது. இருந்தும் ஏற்கனவே பார்த்து பழகிய கிளிஷேவான காட்சி அமைப்புகள் பல இடங்களில் வருவது சற்றே அயற்சியை கொடுத்தாலும் விறுவிறுப்பு இருப்பதினால் அதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. பல இடங்களில் வேகத்தடைகளும் இருக்கத்தான் செய்கிறது. இருந்தும் கதை மாந்தர்கள் அதை சிறப்பான முறையில் கையாண்டு நம்மை கதையுடன் ஒன்றை வைத்து இருக்கின்றனர். இயக்குநரும் அதற்கு ஏற்றார் போல் நேர்த்தியான திரைக்கதை அமைத்து தொடரை கரை சேர்த்திருக்கிறார். 

சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முதல் வெப் சீரிஸ் இது. அதை வழக்கம் போல் சிறப்பான முறையில் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். போலீஸுகே உரித்தான மெடுக்குகள் எதுவும் இல்லாமல் எதார்த்த போலீசாக வந்து கவர்ந்திருக்கிறார். கதை திருப்பமும் சிறப்பாக அமைந்திருப்பது சமுத்திரக்கனிக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. நாயகி ஷிவதா இன்ஸ்பெக்டர் வேடத்தில் சிறப்பான முறையில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். தனக்கு என்ன வருமோ அதை நிறைவாக செய்துவிட்டு சென்றிருக்கிறார். கொலையாளிகளாக வரும் தெலுங்கு நடிகர் புஷ்பா புகழ் ராஜ் திறந்தாஸ் சிறப்பான முறையில் வில்லத்தனம் காட்டி மிரள வைத்திருக்கிறார். இவரது மிரட்டலான நடிப்பு பயமுறுத்துகிறது. இவருடன் வரும் மற்ற கொலையாளியான மூணார் ரமேஷ் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை நிறைவாக செய்து இந்த படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றனர். 

கே கே-வின் ஒளிப்பதிவு காட்சிகளில் நேர்த்தியை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறது. விபின் பாஸ்கர் இசையில் பின்னணி இசை சிறப்பு. தினேஷ்குமாரின் படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாக காட்ட உதவி இருக்கிறது. இது ஏற்கனவே நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் ஒரு வெப் சீரிஸ். அதை நேர்த்தியான முறையில் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் அமைத்து ரசிக்க வைத்திருப்பது வெற்றி பெறும் வெப் சீரிஸாக மாறியிருக்கிறது. 

தடயம் - நேர்த்தி!

Shivada samuthirakani web series
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe