தெலுங்கில் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்ரீகாந்த் ஐயங்கார். இவர் காந்தியை விமர்சித்து பேசும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. அதில் காந்தியை தேசத்தந்தை என அழைப்பது எல்லாருக்கும் அவமானமாகும் எனக் குறிப்பிட்டு ஆபாசமாகவும் மிகவும் இழிவான சொற்களைப் பயன்படுத்தி விமர்சித்திருந்தார். இது தற்போது சர்ச்சையாகியுள்ளது. 

Advertisment

காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காந்தியை பின்பற்றும் நபர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பை ஸ்ரீகாந்த் பெற்றுள்ளார். தேசிய தலைவர் மீது அவதூறு பரப்புவதாக அவர்கள் கூறு வருகின்றனர். இது தொடர்பாக தெலங்கானா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பல்மூர் வெங்கட், நடிகருக்கு எதிராக ஹைதராபாத் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். மிகவும் புண்படுத்தும் வகையில் நடிகர் பேசியது அமைந்ததாக கூறிய அவர், நடிகர் மீது வழக்குப் பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 

Advertisment

85
நடிகர் ஸ்ரீகாந்த்

புகார் கொடுத்தது மட்டுமல்லாமல் திரைப்படத் துறை மற்றும் நடிகர் சங்கங்கள் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் நடிகர், சொன்ன கருத்தை திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்காவிட்டால், அவரை தொழில்முறை அமைப்புகளிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அல்லது அவரது அடுத்தகட்ட படங்களில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தெலுங்கு திரைத்துறையில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.