Advertisment

“நாயகிகள் கவர்ச்சியான உடைகள் அணிந்தால்...” - நடிகர் சர்ச்சை பேச்சு

06 (14)

தெலுங்கில் நடிகராகவும் டப்பிங் கலைஞராகவும் இருந்து வருபவர் சிவாஜி. இவர் தற்போது புதிதாக நடித்துள்ள படம் ‘தண்டோரா’. இப்படம் 25ஆம் தேதி வெளியாகிறது. அதனால் ஹைதராபாத்தில் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சிவாஜி, படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 

Advertisment

பின்பு பெண்களின் உடை குறித்து பேசி அவர் ,  “கதாநாயகிகள், அவர்களுக்கு தோன்றும் விதத்தில் உடையை அணிய வேண்டாம் என அறிவுறுத்துகிறேன். தயவு செய்து புடைவையையோ அல்லது உடலை முழுமையாக மறைக்கும் உடைகளையோ அணியுங்கள். அதில் தான் அழகு இருக்கிறது. மாறாக உடலின் அங்கங்களை காண்பிப்பதில் இல்லை. அப்படி அவர்கள் விருப்பத்திற்கு உடை அணிந்து வெளியில் சென்றால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். என்னை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் எடுத்துக் கொண்டாலும் எனக்கு பிரச்சனை இல்லை. அதை எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியும். 

Advertisment

நீங்கள் கவர்ச்சியான உடைகளை அணியும் போது மக்கள் உங்களை பார்த்து சிரிப்பார்கள். உங்களை ஒரு கேவலமான பெண் என்று நினைப்பார்கள். ஆனால் அதை வெளிப்படையாக சொன்னால் நீங்கள் பெண்களின் சுதந்திரத்தை பற்றி பேசுவீர்கள். கவர்ச்சிக்கு ஒரு வரம்பு இருக்க வேண்டும். உங்கள் சுதந்திரம் ஒரு சிறப்புரிமை. அதை இழந்து விடாதீர்கள். ஒரு பெண் இயற்கையை போன்றவள். இயற்கை என்பது அழகாக இருக்கும் போது அதை மதிக்கிறோம். ஒரு பெண் என் தாயைப் போன்றவள். அவரை நான் எனது இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருக்கிறேன்” என்றார். 

இவரது பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவருக்கு எதிராக நடிகர் மஞ்சு மனோஜ் உள்ளிட்ட சில திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Women Actress actor
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe