Advertisment

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்; 527 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ்குமரன் வெற்றி!

tamilkumara

Tamil Kumaran wins at tamil Producers' Council elections

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான  நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று (22-02-26) நடைபெற்றது.

Advertisment

இத்தேர்தலில், ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு ஆர்.கே.சுரேஷ் மற்றும் எஸ்.கமலக்கண்ணனும், செயலாளர்கள் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் கமீலா நாசரும், பொருளாளர் பதவிக்கு என்.சுபாஷ் சந்திரபோஸும், இணைச்செயலாளர் பதவிக்கு சுஜாதா விஜயக்குமாரும் போட்டியிட்டனர்.

Advertisment

மூத்த தயாரிப்பாளர்களான அழகன் தமிழ்மணி, சித்ரா லட்சுமணன், எச்.முரளி, எம்.கபார், ஆர்.மாதேஷ் ஆகியோருடன் சேர்ந்து சாலை சகாதேவன்,  பைஜா டாம், எஸ்.ஜோதி, வி.பழனிவேல், கே.செந்தாமரை கண்ணன், நீல்கிரிஸ் ஏ.முருகன், ஜி.எம்.டேவிட்ராஜ், டி.என்.தாய்சரவணன், கே.முருகன், வி.ஞானவேல், பிரவின்காந்த், வி.என்.ரஞ்சித் குமார், எஸ்.ஜெயசீலன், ராஜா என்கிற பக்ருதீன் அலி அகமத், .எம்.தனசண்முகமணி, பி.ஜி.பாலாஜி, இசக்கிராஜா, .பி.மகேந்திரன், எஸ்.பிரப்தீஸ் சாம்ஸ், ஏ.ஏழுமலை, எஸ்.என்.ராஜராஜன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டனர். இந்த தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மிஷ்கின் போன்ற பிரபலங்கள் நேரில் வந்து வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் மொத்தம் 1,171 வாக்குகள் பதிவான நிலையில், 527 வாக்குகள் வித்தியாசத்தில் ஜி.எம்.தமிழ்குமரன் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். நலன் காக்கும் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி.எம்.தமிழ்குமரன் 788 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேணாண்டாள் முரளி 241 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். 

lyca tamil producers council
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe