தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது. இத் தேர்தலில் .ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு ஆர்.கே.சுரேஷ் மற்றும் எஸ்.கமலக்கண்ணன் அவர்களும், செயலாளர்கள் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் .கமீலா நாசர் அவர்களும், பொருளாளர் பதவிக்கு என்.சுபாஷ் சந்திரபோஸ் அவர்களும், இணைச்செயலாளர் பதவிக்கு சுஜாதா விஜயக்குமார் அவர்களும் போட்டியிடுகின்றனர்.
மூத்த தயாரிப்பாளர்களான அழகன் தமிழ்மணி, சித்ரா லட்சுமணன், எச்.முரளி, .எம்.கபார், ஆர்.மாதேஷ் ஆகியோருடன் சேர்ந்து .சாலை சகாதேவன், பைஜா டாம், எஸ்.ஜோதி, வி.பழனிவேல், கே.செந்தாமரை கண்ணன், நீல்கிரிஸ் ஏ.முருகன், ஜி.எம்.டேவிட்ராஜ், டி.என்.தாய்சரவணன், கே.முருகன், வி.ஞானவேல், பிரவின்காந்த், வி.என்.ரஞ்சித் குமார், எஸ்.ஜெயசீலன், .ராஜா @ பக்ருதீன் அலி அகமத், .எம்.தனசண்முகமணி, பி.ஜி.பாலாஜி, இசக்கிராஜா, .பி.மகேந்திரன், எஸ்.பிரப்தீஸ் சாம்ஸ், ஏ.ஏழுமலை, எஸ்.என்.ராஜராஜன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் 22-12-2025 அன்று ஹோட்டல் ராதா பார்க் இன்னில் மாலை 6.00 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இக் கூட்டதிற்கு சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி எஸ்.தாணு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம், வி.சி.குகநாதன், இசையமைப்பாளர் தீனா, இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் சரண் ஆகியோர் கலந்து கொண்டனர். வேட்பாளர்களை கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் அறிமுகப்படுத்தினார்.
சிறப்பு விருந்தினர்கள் வேட்பாளர்களை வாழ்த்தி பேசினார்கள். ஜி.எம்.தமிழ்குமரன் மற்றும் ஆர்.ராதாகிருஷ்ணன் தங்கள் அணி வெற்றி பெற்று நிர்வாகம் அமைந்தால் சங்க உறுப்பினர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பேசினார்கள். இக் கூட்டத்திற்கு பெருவாரியான உறுப்பினர்கள் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/24/11-2025-12-24-14-24-46.jpg)