Advertisment

பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்... ஆன்லைன் புக்கிங்கில் ஷேர்... - நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள்

16 (2)

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க 5வது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் தியாகராஜன் பொதுச் செயலாளர் டி சிவா, துணைத் தலைவர்கள் எஸ். ஆர். பிரபு, தனஞ்செயன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Advertisment

இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமானவை, “15 வருடங்களுக்கு மேலாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் 'விபிஎப் கட்டணத்தை டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன் நிறுவனங்களுக்கு வாராவாரம் கொடுத்து வருகிறார்கள் ஆனால், அதே ப்ரொஜெக்டரில் திரையிடும் ஆங்கில மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு பல வருடங்களாக அவ்வாறு கட்டணம் வசூலிப்பதில்லை. இந்த பாகுபாட்டை டிஜிட்டல் நிறுவனங்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

Advertisment

தமிழ்​நாட்​டில் 1,150 திரையரங்​கங்​கள் உள்​ளன. அவற்றை ஒருங்​கிணைத்து பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் வெளிப்​படைத் தன்​மைக் கொண்டு வர ஒருங்​கிணைக்​கப்​பட்ட மென்​பொருளைக் கொண்டு மையப்​படுத்​தப்​பட்ட ஆன்​லைன் பாக்ஸ் ஆபிஸ் கண்​காணிப்பு மென்​பொருள் அமைப்பு வேண்​டுமென்று நமது சங்​கத்​தின் மூலம் கோரிக்கை வைக்​கப்​பட்​டுள்​ளது.

ஆன்​லைன் டிக்​கெட் புக்​கிங்​கில் கட்​ட​ணம் வசூலிக்​கும் புக் மை ஷோ, ஸோமோட்டோ டிஸ்ட்​ரிக்ட் போன்ற நிறு​வனங்​கள் அந்​தந்த திரைப்​படத்​தின் தயாரிப்​பாளர்​களுக்​கும் ஒரு ஷேர் தர வேண்​டும். திரையரங்கு உரிமை​யாளர்​கள், தயாரிப்​பாளர்​கள் மற்​றும் ஆன்​லைன் டிக்​கெட் புக்​கிங் செய்​யும் நிறு​வனம் என மூவருக்​கும் சரிச​மாக ஷேர் தரப்பட வேண்​டும்” உள்ளிட்டவைகள் ஆகும்.

Producer Association Tamil Film Producers Council
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe