தமிழ் , தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி. அந்த வகையில் இந்தியில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக 2021ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘அனபெல் சேதுபதி’ படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்திய யூட்யூப் பாட்காஸ்ட் ஒன்றில் தென் இந்திய சினிமா குறித்து பேசினார். அப்போது பெண்களின் ஆடை குறித்து பேசிய அவர், “தென்னிந்திய சினிமாவில் பெரும்பாலும் பெரிதான உள்ளாடைகளை அணிய சொல்கிறார்கள். அதில் பிரச்சனை என்னவென்றால் இயக்குநர் அதை யாரிடம் சொல்கிறார் என்பதுதான். பொதுவாக இது போன்ற விஷயங்கள் முதலில் இயக்குநரிடமிருந்து உதவி இயக்குநருக்கு செல்லும், பின்பு ஸ்டைலிங் குழுவிற்கு செல்லும், பின்பு சிகை அலங்கார குழுவிற்கு செல்லும், இறுதியாக நடிகைக்கு செல்லும்.
ஆனால் யோசித்துப் பாருங்கள், ஒரு பாடலை படமாக்கி கொண்டிருக்கும் போது திடீரென நடிகை வெளியே செல்கிறார். திரும்பி வரும்போது கொஞ்சம் மாற்றம் செய்து வருகிறார். இப்படி இருக்கும் போது அங்கு என்ன நடந்திருக்கும் என்பது எல்லோருக்குமே தெரியும். அது எவ்வளவு சங்கடமாக இருக்கும்” என்றார்.
Follow Us