ஓமன் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ஈரானில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு உயிர் சேதங்களும் நடந்துள்ளன. இதையடுத்து, ஈரானும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்ற சூழ்நிலை அதிகரித்து வருவதால் அங்கு பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் பல வெளிநாட்டு பயணிகள் சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஸ்வாஸ்விகாவும் அபு தாபியில் சிக்கித் தவித்தார். பின்பு ஒரு வழியாக மார்ச் 4ஆம் தேதி பாதுகாப்பாக இந்தியா வந்தடைந்தார்.
இது தொடர்பாக கொச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடும் மோசமான சூழல் அங்கு இல்லை. ஆனால் நாங்கள் வேறொரு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் நிச்சயமாக எங்களுக்கு கொஞ்சம் மோசமாக இருந்தது. நான் 3 நாட்கள் அபுதாபியில் இருந்தேன். பிப்ரவரி 28 ஆம் தேதி வரவிருந்தேன். எல்லாமே எங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. விமானமும் சரியாக இருந்தது” என்றார்.
தமிழில் சாட்டை, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்தவர் ஸ்வாஸ்விகா. அதன் பிறகு நீண்ட நாட்கள் கழித்து லப்பர் பந்து மூலம் ரீ எண்ட்ரி கொடுத்து பிரபலமடைந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக மாமன், ரெட்ரோ, போகி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது சூர்யாவின் கருப்பு படம் உள்ளிட்ட இன்னும் சில மற்ற மொழி படங்களையும் வைத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/05/393-2026-03-05-18-02-14.jpg)