வழக்கமாக பண்டிகை நாளன்று திரைப்படங்கள் வெளியாவது வழக்கம், ஒரு சில படங்கள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் சில காரணங்களால் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டு மீண்டும் வேறொரு தேதியில் படம் வெளியாகும். அதேபோல், இந்த பொங்கலுக்கும் இரண்டு படங்கள் வெளியாக உள்ளதாக சில மாதங்களாகவே திரை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு கரணம் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாதது தான். இது போற சம்பவங்கள் முன்பெல்லாம் சாதாரணமானதாக இருந்தாலும் தற்போது அரசியல் பார்வையுடன் நோக்கப்படுகினறன.
இப்போது, படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்பதத்திற்கு காரணம் அரசியல் பின்புலம் தான் என்று பலரும் தொடர்ந்து பேசிவருகின்றனர். அந்த வகையில் பராசக்தி படத்திற்கு தணிக்கைசான்று பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஜனநாயகன் படத்திற்கு இன்னும் தணிக்கை சான்று வழங்காமல் இருப்பது குறிப்ப்பிடத்தக்கது. இன்று (09-01-26) ஜனநாயகன் படம் வெளியாகும் என்று அறிவிக்க பட்டிருந்த நிலையில், படத்திற்கு தணிக்கை சான்று வழங்காதது தொடர்பாக உயர்நீதி மன்றத்தை நாடியது படக்குழு. வழக்கில் நீதிமன்றம் படத்திற்கு யு / ஏ சான்று வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டது. இருப்பினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் படம் வெளியாவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், விஜயின், ஜனநாயகன் திரைப்படத்துக்கு இன்னும் தணிக்கைசான்று கிடைக்காதது குறித்து நடிகரும், முன்னாள் தணிக்கை வாரிய உறுப்பினருமான எஸ்வி சேகர் விளக்கம் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். " முன்பெல்லாம் தணிக்கை வாரியம் என்பது குறிப்பிட்ட காட்சிகளை அல்லது சில வார்த்தைகளை நீக்க அறிவுறுத்தும், ஆனால் இப்போது அப்படி இல்லை, முழு படத்தையும் பார்க்கிறார்கள். முன்பு, குழுவில் 4 உறுப்பினர்களும், ஒரு தணிக்கை வாரிய அதிகாரியும் திரைப்படத்தை பார்ப்பார்கள். அதில் 4 உறுப்பினர்களும் ஏகமனதாக குறிப்பிட்ட (யு அல்லது ஏ அல்லது யு/ஏ) சான்று கொடுக்கலாம் என்று சொல்லிவிட்டால் அந்த சான்றை படத்திற்கு கொடுத்து விடுவார்கள்.
இதற்கு ஆன்லைனில் தான் பதிவு செய்ய வேண்டும். பெரிய படம் வருது மற்ற படங்கள் எல்லாம் தள்ளி நில்லுங்கள் என்று சொல்ல முடியாது. அடுத்த ஆண்டு வரக்கூடிய படத்திற்குக் கூட தணிக்கை சான்று வாங்க முன்கூட்டியே பணம் கட்டி வைத்துக் கொள்வார்கள். அப்படி இருக்கும்போது அந்த படங்களை தான் பார்த்தாக வேண்டும். ஜனநாயகன் படத்தை பொறுத்தவரை கோர்ட்டில் நான்கில் ஒரு உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்கள். அப்படியென்றால் 4 பேரில் 3 பேர் ஏற்றுக்கொண்ட விஷயத்தை ஒருவர் எதிர்க்கிறார். அப்படி யாரெனும் ஒருவராவது எதிர்ப்பு தெரிவிக்கும் போது, அவரது கருத்தை மீறி ஒரு படத்துக்கு தணிக்கை சான்று வழங்க முடியாது. எதிர்ப்பு தெரிவிக்கும் நபர் படத்தை தணிக்கை வாரிய தலைவருக்கு அனுப்பி வைத்து விட்டால், தலைவர் அந்த படத்தினை ஆய்வு செய்த பிறகு படத்திற்கு சான்று வழங்கப்படும் என்று கூறினார்.
இருப்பினும் படத்திற்கு இது வரையிலும் தணிக்கை சான்று வழங்காமல் இருப்பது, படக்குழுவிற்கு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/09/10-2-2026-01-09-18-35-21.jpeg)