ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தி படம் துரந்தர். இதில் தெய்வத்திருமகள் பட புகழ் சாரா அர்ஜுன் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இது சற்று விமர்சனத்தை கிளப்பியது. அதாவது 40வயது நடிகருடன் 20வயது நடிகை ஜோடியாக நடிக்கலாமா என்று சிலர் கேள்வி எழுப்பி வந்தனர். 

Advertisment

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சஷ்வத் சச்தேவ் இசையமைத்துள்ளார். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத கும்பலை ஸ்பையாக செல்லும் ரன்வீர் சிங் எப்படி அழிக்கிறார் என்பதை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படம் பாகிஸ்தானுக்கு எதிரான படம் என்று வளைகுடா நாடுகளான பக்ரைன், குவைத் ஓமன், கத்தார், சவுதி அரேபியாஉள்ளிட்ட நாடுகளில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

11 (31)

கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் இப்படம் வசூலித்துள்ளது. இந்த சூழலில் சூர்யா இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில். “துரந்தர் சிறப்பான படம். ஒரு தலைசிறந்த படத்தை வழங்கியதற்காக ஆதித்யா தாருக்கு நன்றி. உங்களின் கிராஃப்ட்டை கண்டு வியக்கிறேன். உங்களுக்கும் குழுவிற்கும் என் அன்பும் மரியாதையும். என் சகோதரர் மாதவனுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். அக்ஷய் கன்னா... என்ன ஒரு மாற்றம். மிகவும் தகுதியான பிளாக்பஸ்டருக்காக ரன்வீர் சிங்கிற்கு வாழ்த்துக்கள். அன்புடன் சூர்யா மற்றும் ஜோதிகா” எனக் குறிப்பிட்டுள்ளார்.