அகில் சத்யன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘சர்வம் மாயா’. இப்படத்தில் அஜு வர்கீஸ் மற்றும் மூத்த நடிகர் ஜனார்த்தனன் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் ப்ரீத்தி முகுந்தன், வீர தீர சூரன் பட தயாரிப்பாளர் ரியா ஷிபு நடித்திருந்தார். ஃபயர்ஃப்ளை ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த்திருந்த இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ரியா ஷிபு கதாபாத்திரம் மற்றும் அவரது நடிப்பு பலராலும் ரசிக்கப்பட்டது. இப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதையடுத்து கடந்த ஜனவரி 30ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இதையடுத்தும் சமூக வலைதளங்களில் இப்படத்தின் காட்சிகள் வைரலானது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/18/14-63-2026-02-18-16-48-26.jpg)
இந்த நிலையில் இப்படக்குழுவின் ரியா ஷிபு மற்றும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு சூர்யா மற்றும் ஜோதிகா வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒரு பூங்கொத்துடன் அதில் கடிதம் அனுப்பியுள்ளனர். ரியா ஷிபுவிற்கு அனுப்பிய கடிதத்தில், “சர்வம் மாயா படத்தில் உங்கள் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது, ரியா. மிகவும் இயல்பாகவும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. நீங்கள் தொடர்ந்து வெற்றி பெறவும், இன்னும் பல மறக்கமுடியாத கதாபாத்திரங்களில் நடிக்கவும் வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தனது எக்ஸ் பக்கத்தில் அகிர்ந்த ரியா ஷிபு, எல்லையற்ற மகிழ்ச்சியில் இருப்பதாக நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு அனுப்பிய கடிதத்தில், “உங்களது இசை அற்புதமாக இருந்தது. அது படத்தை மேலும் உயர்த்தியுள்ளது. தொடர்ந்து மேஜிக்கை உருவாக்குங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஜஸ்டின் பிரபாகரும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Follow Us