அகில் சத்யன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘சர்வம் மாயா’. இப்படத்தில் அஜு வர்கீஸ் மற்றும் மூத்த நடிகர் ஜனார்த்தனன் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் ப்ரீத்தி முகுந்தன், வீர தீர சூரன் பட தயாரிப்பாளர் ரியா ஷிபு நடித்திருந்தார். ஃபயர்ஃப்ளை ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த்திருந்த இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் காரணமாக ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதையடுத்து கடந்த ஜனவரி 30ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இதையடுத்தும் சமூக வலைதளங்களில் இப்படத்தின் காட்சிகள் வைரலானது. இதையடுத்து இப்படத்தில் நடித்த ரியா ஷிபு மற்றும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோருக்கு சூர்யா மற்றும் ஜோதிகா பாராட்டு தெரிவித்து பரிசு அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் இப்படத்தின் நாயகனுக்கு சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவருக்கு அளித்த பரிசில், “அன்புள்ள நிவின், 'சர்வம் மாயா' படத்தின் வெற்றிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது நடிப்பு மிகவும் தனித்துவமாக இருந்தது. மிக நேர்த்தியாகவும், இயல்பாகவும், பார்ப்பவர்களைக் கட்டிப்போடும் வகையிலும் அமைந்திருந்தது. இந்தத் திரைப்படத்திற்கு மக்கள் அளிக்கும் அன்பைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இதேபோல் இன்னும் பல மறக்கமுடியாத கதாபாத்திரங்களிலும், மைல்கற்களையும் நீங்கள் எட்ட வாழ்த்துகிறோம” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/21/17-54-2026-02-21-16-02-55.jpg)