பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா மற்றும் ஸ்ரீ லீலா நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு படம் ‘மாஸ் ஜதாரா’. இப்படத்தில் நவீன் சந்திரா வில்லனாக நடித்திருக்க ராஜேந்திர பிரசாத், நரேஷ், அஜய் கோஷ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீன்ஸ் இசையமைத்துள்ள. நாகவம்சி தயாரித்துள்ள இப்படம் நவம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாதில் நடந்துள்ளது. இதில் ரவிதேஜா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட படக்குழுவினருடன் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். விழாவில் ரவிதேஜா குறித்து அவர் பேசுகையில், “ரவி தேஜா சார் உங்கள் படங்கள் தமிழிலும் பெரிய வரவேற்பை பெறும். உங்களுடைய இடியட் மற்றும் கிக் போன்ற படங்கள் இங்கு ஹிட் அடித்துள்ளன. உங்களது தமிழ் ரீமேக்கான சிறுத்தை படம் என்னுடைய தம்பி கார்த்திக்கு பெரிய மைல்கல் படமாக அமைந்தது. அதற்காக நன்றி.
தமிழ்நாடு மக்கள் உங்கள் படத்தை டப்பிங் இல்லாமலேயே ரசித்துப் பார்க்கிறார்கள். ரஜினி சாரின் காமெடி டைமிங்கும் அமிதாபச்சன் சாரின் ஸ்டைலும் உங்களுக்கு இருக்கிறது. இந்தத் திறமை சிலருக்கு தான் அமையும்” எனப் புகழ்ந்தார். சூர்யா தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் தான் ரவி தேஜா படத் தயாரிப்பாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us