Advertisment

“திடீர்னு எங்க இருந்துடா வருது இந்த...” - சூர்யா வெளியிட்ட வீடியோ

14 (57)

சமீப காலங்களில் ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அப்படி வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில், விஜய்யின் கில்லி, ரஜினியின் படையப்பா மற்றும் சமீபத்தில் வெளியான அஜித்தின் மங்காத்தா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

Advertisment

இதனைத் தொடர்ந்து தற்போது கடந்த 2002ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ படம் காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அமீர் இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். மேலும் த்ரிஷாவும் நாயகியாக அறிமுகானார். மேலும், லைலா நந்தா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். காதலை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல பெற்றிருந்தன. இப்படம் வெளியான அந்த காலகட்டத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. 

Advertisment

இந்த நிலையில் இப்படம் தொடர்பாக சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “ஒழுங்கா தானடா இருந்தீங்க திடீர்னு எங்க இருந்துடா வருது இந்த லவ்வு, காதலுங்கிறது இங்க இருந்து வரக்கூடாது, இங்க இருந்து வரணும், தனி மரம் தோப்பெல்லாம் ஆகாது. இந்த மாதிரி பல டயலாக்ஸ வாட்ஸப் ஸ்டேட்டஸ், ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸா பார்த்துட்டு இருக்கேன். 20 வருஷத்துக்கு முன்னாடி வந்த மௌனம் பேசியதே படத்தை இப்பவும் நிறைய பேர் ஃபேவரட் படமா சொல்லிட்டு இருக்காங்க. இயக்குநர் அமீருக்கு இது முதல் படம். என்னுடைய சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. த்ரிஷா, லைலா, நேஹானு 3 ஹீரோயின்ஸ் இருந்தாலும் கட்டிபுடிக்கிறதுனு எதுவும் இல்லாம ஒரு லவ் ஸ்டோரி. யுவன் சங்கர் ராஜாவோட ஆல்பம் ஹிட்ஸ் சாங்ஸ்ல இதுவும் என்னுடைய மோஸ்ட் ஃபேவரட் படம். ஒரு தலைமுறையே இந்த படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்ல. இந்தப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகுது, ஒரு ஷோ உங்களோட சேர்ந்து பார்க்க ஆசப்படுறேன்” என பேசியுள்ளார்.

trisha ameer actor suriya
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe