ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். ஆனால் படத்திற்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருந்த ‘வாடிவாசல்’ படம் சில காரணங்களால் தள்ளிப் போகிறது. 

Advertisment

இதனிடையே மலையாள இயக்குநர் ஜீத்து மாதவனுடன் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் உலா வந்தது. இது தற்போது உறுதியாகியுள்ளது. படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் சூர்யா, ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

Advertisment

சூர்யாவின் 47வது படமாக உருவாகும் இப்படத்தை சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து ‘ழகரம் ஸ்டூடியோஸ்’ பேனரில் தயாரிக்கின்றனர். நாயகியாக நஸ்ரியா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ‘பிரேமலு’ நாயகன் நஸ்லின் நடிக்கிறார். அதோடு ஆனந்த ராஜ் மற்றும் ஜான் விஜய் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையை சுஷின் ஷ்யாம் கவனிக்கிறார். பணிகள் பூஜையுடன் தொடங்கியது.