ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர் 2’.  இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வர அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஆகியோரும் நடிப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து சமீபத்தில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி படத்தில் ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளதாக தகவல் வெளியானது. 

Advertisment

இவர்களோடு பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, நடித்துள்ளார். இவர் தற்போது இப்பட அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, “ஜெயிலர் 2 படம் சிறப்பாக வந்துள்ளது. முதல் பாகத்தை விட இது இன்னும் அருமையாக இருக்கும். எனக்கு நீண்ட காலமாக ரஜினியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், இந்த படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. 

Advertisment

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில், ஒவ்வொரு காட்சிகளிலும் ரஜினி அனைவரையும் ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் ஒரு வித்தைக்காரர்” என்றார். இதனை அவர் நடிப்பில் வரும் 19ஆம் தேதி வெளிவரும் ‘யூத்’ பட புரொமோஷனில் தெரிவித்தார். இப்படத்தை கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ளார்.