தமிழ் சினிமாவில் நடிகர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோர் பெருமளவில் ரசிகர்களால் கொண்டாடப்படுவது வழக்கம். அதே வேளையில் ரசிகர்களால்  பெரிதும் கொண்டாடப்படுபவர்கள் இயக்குனர்கள். அந்த வகையில், ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபல இயக்குநராக இருந்து வருபவர் சுந்தர்.சி. இவரது படங்கள் ரசிகர்கள் மட்டுமல்லாமல் கும்பத்தினர் அனைவரும் கொண்டாடும் படங்களாக இருக்கும் எனப்  பேசப்படும் அளவிற்கு மிக முக்கிய இயக்குனராக இருந்து வருகிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான அரண்மனை  படங்கள் மிகப் பெரிய அளவிலான வெற்றியைப்  பெற்றுள்ளன. குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான ‘மதகதராஜா’ மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த படத்தில் விஷால், சந்தானம் போன்ற பலரும் நடித்திருந்தனர். 

Advertisment

இந்த வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி கை கோர்க்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தது. ஏற்கனவே சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் ஆம்பள, ஆக்சன் போன்ற திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. இதில் ஆம்பள நல்ல வரவேற்பும் ஆக்‌ஷன் ஓரளவான வரவேற்பும் பெற்றிருந்தன. இந்த நிலையில், தற்போது சுந்தர்.சி, விஷால், மற்றும் ஹிப் ஹாப் ஆதி இவர்கள் கூட்டணியில் அடுத்த படம் தயாராகிறது.

Advertisment

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் இறுதி கட்டப்  பணிகளில் பிசியாக  இருந்து வருகிறார் சுந்தர்.சி. இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்தவுடன் விஷாலுடனான படத்தின், படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை (21-01-26) வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.