ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜூலையில் ரிலீஸஸாக உள்ளது. இப்படத்தை அடுத்து மீண்டும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு கமலுடன் இணைந்து நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இப்படத்தின் இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை. இந்த படத்திற்கு முன்பு ரஜினி சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இப்படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க ரஜினியின் 173 ஆவது படமாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டது. இப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனவும் தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சுந்தர் சி - ரஜினி காம்போவில் இதற்கு முன்னதாக அருணாச்சலம் படம் வெளியாகி மாஸ் ஹிட் அடித்தது. அந்த காம்போ தற்போது மீண்டும் இணைந்ததால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது. அதோடு ரஜினி - கமல் இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்ததால் படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது.
இந்த நிலையில் சுந்தர் சி திடீரென இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனத்த இதயத்துடன் சில முக்கியமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், ரஜினி 173வது படத்தில் இருந்து விலக முடிவெடுத்துள்ளேன். இந்த படம் எனக்கு ஒரு கனவு நனவான தருணமாகும்.
வாழ்க்கையில், நம் கனவுகளிலிருந்து வேறுபட்டாலும், நமக்காக வகுக்கப்பட்ட பாதையை நாம் பின்பற்ற வேண்டிய தருணங்கள் உள்ளன. ரஜினி - கமல் என இரண்டு துருவங்களுடன் எனது நெருக்கம் நீண்ட தூரம் செல்கிறது. நான் எப்போதும் அவர்களை மிக உயர்ந்த மதிப்பில் வைத்திருப்பேன். கடந்த சில நாட்களாக நாங்கள் பகிர்ந்து கொண்ட சிறப்பு தருணங்கள் எனக்கு என்றென்றும் போற்றப்படும். அவர்கள் எனக்கு விலைமதிப்பற்ற பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளனர், மேலும் நான் முன்னேறும்போது அவர்களின் உத்வேகத்தையும் ஞானத்தையும் தொடர்ந்து தேடுவேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/13/13-10-2025-11-13-15-18-34.jpg)
இந்த வாய்ப்பிலிருந்து நான் விலகிச் சென்றாலும், அவர்களின் வழிகாட்டுதலை நான் தொடர்ந்து நாடுவேன். இந்த மகத்தான படைப்பிற்காக என்னைக் கருத்தில் கொண்டதற்காக அவர்கள் இருவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன். இந்தச் செய்தி இந்த முயற்சியை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களை ஏமாற்றியிருந்தால் எனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். அதை உங்களுக்குச் சொல்ல நான் உறுதிபூண்டுள்ளேன், மேலும் உங்கள் உற்சாகத்தை உயர்த்தும் பொழுதுபோக்குகளைத் தொடர்ந்து வழங்குவேன் என்று உறுதியளிக்கிறேன். உங்கள் அசைக்க முடியாத ஆதரவுக்கும் புரிதலுக்கும் நன்றி” என்றார். இந்த அறிக்கை நடிகை குஷ்புவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு பின்பு திடீரென டெலிட் செய்யப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/13/15-17-2025-11-13-14-48-47.jpg)