Advertisment

ரஜினி படத்தில் விலகியதற்கு என்ன காரணம்? - சுந்தர் சி பதில்

380

ரஜினியின் 173வது படம் சுந்தர் சி இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. மேலும் கமல் தயாரிக்க அடுத்த ஆண்டு பொங்கலை குறைவைத்து பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் முதல் முறையாக கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியது. ஆனால் சில காரணங்களால் சுந்தர் சி வெளியேறினார். அவருக்கு பதில் டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி உள்ளே வந்து பணிகளை கவனித்து வருகிறார். 

Advertisment

சுந்தர் சி விலகியது குறித்து தயாரிப்பாளர் கமலிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ரஜினிக்கு பிடித்த கதையைத் தான் பண்ண முடியும் என பதிலளித்தார். ஆனால் சுந்தர் சி இதுவரை பதிலளிக்காமல் இருந்தார். இப்போது சென்னை டி.நகரில் நடந்து ஒரு கடை திறப்பு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியுள்ளார். அவரிடம் இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதாவது அவர் இயக்கவிருந்த சங்கமித்ரா படத்தை மீண்டும் தொடங்குவதற்காக ரஜினி படத்தை கைவிட்டாரா எனக் கேட்கப்பட்டது. 

Advertisment

அதற்கு பதிலளித்த அவர், “அதற்கும் இதற்கு சம்பந்தம் இல்லை. எனக்கு அடுத்தடுத்து படங்கள் இருக்கிறது. இந்த சமயத்தில் சங்கமித்ராவை ஆரம்பித்தால் இரண்டு வருடம் ஆகிவிடும். அதனால் இரண்டு வடங்கள் கழித்து சாத்தியம் இருந்தால் ஆரம்பிக்கலாம். ஆனால் அதற்கும் ரஜினி பட விலகியதற்கும் எந்த கனெக்‌ஷனும் இல்லை” என்றார். 

Kamal Haasan sundar c Actor Rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe