சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் 1960களில் ஒரு வரலாற்றுப் பின்னணியில் மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். அதே போல் சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம். இப்படம் வரும் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. 

Advertisment

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் சுதா கொங்கரா கலந்து கொண்டு பேசுகையில், “மணி சார் எனக்கு கத்துக்கொடுத்த முக்கியமான விஷயம், நம்ம வாழ்க்கையில இது முடியாது, இதை செய்யக்கூடாது, இது இப்படி நடக்காது... அப்படின்னு சொல்லும் போது மட்டும் தான் அதை நடத்தி காட்டனும். அதுதான் பராசக்தி. ஏன்னா, நடக்காது, முடியாது, கூடாதுன்னு சொன்ன ஸ்கிரிப்ட் தான் பராசக்தி. அது இப்போது உயிர் எடுத்துருக்குன்னா பல பேர் அதுக்கு காரணம். முக்கிய காரணம் என்னுடைய குரு மணிரத்னம். எனக்கு நிறைய பேசுறதுக்கு இல்ல. அதனால் பராசக்தி பேசட்டும். அதை பார்த்து நீங்க பேசுங்க. அதுதான் என் பேச்சா இருக்கட்டும். 

Advertisment

இந்த படம் ஒரு தருணத்துல நடக்காம இருக்கும்னு சொன்னாங்க. ஆனா அதை என்னுடைய டீம் நடத்தி காட்டுனாங்க. ஒரு தியேட்டர் ஓனர் திருச்சில இருந்து கூப்பிட்டிருந்தாரு, படத்துக்கு தடை போயிடுச்சா, படம் வருதான்னு கேட்டார். கண்டிப்பா வருதுன்னு சொன்னேன். அதுக்கு அவர் படங்கள் வந்தா தான் தியேட்டர் ஓடும், தியேட்டர் ஓடுனா தான் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நல்லாருப்பாங்க, அவங்க நல்லாருந்தா தான் நம்ம புரொடியூசர் நல்லாருப்பாங்க. புரொடியூசர் நல்லாருந்தா தான் ஆர்டிஸ்ட், டெக்னீஷியன்ஸ் நல்லாருப்பாங்கன்னு சொன்னார். அதனால் என்னுடைய பெரிய ஆசை, இந்த பொங்கலுக்கு இரண்டு படமுமே ஜெயிக்கனும். தியேட்டருக்கு மக்கள் வந்து என்ஜாய் பண்ணி பார்க்கனும், சினிமா இன்னும் வாழனும்” என்றார்.