பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'பிளாக்'. ஜீவா - பிரியா பவானி சங்கர் நடித்த இந்தத் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ரஜினிகாந்த்தின் வேட்டையன் வெளியான அதே வாரம் வெளியானது. வித்தியாசமான - சுவாரசியமான படமாக விளங்கிய பிளாக் அமைதியான வெற்றியை பெற்றது.
தற்போது மீண்டும் ஜீவா - கே.ஜி.பாலசுப்பிரமணி கூட்டணி கண்ணன் ரவி தயாரிப்பில் அடுத்த படத்தை தொடங்கியுள்ளது.இப்படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஜீவா உடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் ஒளிப்பதிவாளராக கோகுல் பினோய் பணிபுரியவுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/15/v-2025-07-15-19-27-02.jpg)