சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் 1960களில் ஒரு வரலாற்றுப் பின்னணியில் மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். அதே போல் சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம். இப்படம் வரும் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் அதர்வா கலந்து கொண்டு பேசுகையில், “என்னுடைய கதாபாத்திரம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இந்த மாதிரி ஒரு கதாப்பாத்திரத்திற்காக ரொம்ப காத்திருந்தேன். இந்த வாய்ப்பிற்கு நன்றி சுதா மேம். அவங்க ஒரு பவர்ஃபுல்லான டைரக்டர். டீமை அழகா லீட் பன்னுவாங்க. ஒவ்வொரு சீனையும் சொல்லும் போதும் போது அவங்களுடைய கண்ணில் நீர் வந்துவிடும். அது சினிமா மேல் அவர் வைத்திருக்கும் அன்பை காட்டுகிறது. அதனால்தான் படம் இப்படி தெரிகிறது. அது போக படப்பிடிப்பில் அவர் எனக்கு ஒரு அம்மா மாதிரி. அதற்கும் நன்றி.
ரவி மோகன் சாருடைய ஆன் ஸ்க்ரீனுக்கும் ஆஃப் ஸ்க்ரீனுக்கும் சம்பந்தமே இல்லை. அதர்வா நடித்த சின்னதுரை கதாபாத்திரம் எல்லாரும் தங்களது வாழ்க்கையில் இப்படி ஒருவர் இருக்க வேண்டும் என நினைக்கும் கேரக்டர். சிவகார்த்திகேயன் சார் ரொம்ப ஸ்வீட். கோவிட் சமயத்தில் அவரை பார்க்க சென்ற போது, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க செலவழித்தார். குடும்பம் போல் ரசிகர்கள் இருப்பதை முதன் முறையாக நேரில் பார்த்தேன். தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அது இப்படி ஒரு அறிமுக படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. இந்த படத்தை தியேட்டருக்கு வந்து பாருங்க. இந்த போராட்டுத்துக்கு ஒரு டிக் மார்க் உங்க டிக்கெட் தான்” என்றார்.
Follow Us