தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீ லீலா. தமிழில் சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் வெளியான ‘பராசக்தி’ படம் மூலம் அறிமுகமாகியிருந்தார்.
இதையடுத்து தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதைத் தவிர்த்து அஜித்தின் 64 படத்திலும் கமிடாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தெலுங்கில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகையாக பிஸியாக இருந்தாலும் கல்லூரியில் மருத்துவ படிப்பையும் படித்து வந்தார் ஸ்ரீ லீலா. இந்த சூழலில் அந்த பட்டப் படிப்பை அவர் முடித்துள்ளார். மேலும் அக்கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு கொண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றுள்ளார். நடிகை மற்றும் எம்.பி-யுமான ஹேமா மாலினி கையில் பெற்றுக்கொண்டார். இது தொடர்பான வீடியோவும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதே சமயம் அவருக்கு வாழ்த்துகளையும் ரசிகர்கள் பொழிந்து வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/11/13-39-2026-02-11-18-25-33.jpg)