தனுஷின் 55வது படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் தயாரிப்பாளர் அன்புச் செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் பூஜையும் போடப்பட்டது.
பின்பு எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் நாயகியாக சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. அடுத்து சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இசையமைப்பாளர் அப்டேட் நேற்று முன் தினம் வெளியானது. இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் நாயகி குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தெலுங்கு இளம் நடிகை ஸ்ரீலீலா கமிட்டாகியுள்ளார். இதன் மூலம் இரண்டாவது தமிழ் படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இதற்கு முன் பராசக்தி படம் மூலம் அறிமுகமாகியிருந்தார்.
You didn't see this coming 😉
— Wunderbar Films (@wunderbarfilms) January 31, 2026
Welcoming the dazzling damsel @sreeleela14 on board #D55 🔥@dhanushkraja@Rajkumar_KP@wunderbarfilms@RTakeStudios@SaiAbhyankkar@Shra2309@azy905@theSreyas@sandy_sashr@vishuramspic.twitter.com/fROtGwO0T2
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/31/15-55-2026-01-31-19-23-45.jpg)