செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கும் இப்படத்தை வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் சுஹாஸ், சத்​ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார் உள்ளிட்டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கடலில் நடக்கும் படகு போட்டியை மைய்யமாகக் கொண்டு உருவாகிறது. இதனால் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கடல் பகுதிகளில் படமாக்கப்படுகிறது. அந்த வகையில் இராமநாதபுர கடலில் கடந்த அக்டோபர் மாதம் படப்பிடிப்பு நடந்தது. இப்போது அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சூரி பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் சூரி, படத்தில் நடித்த சுஹாஸின் தெலுங்கு படம் ‘ஹே பகவான்’ நாளை வெளியாகவுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஆங்கிலத்திலும் தெலுங்கில் இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/19/10-64-2026-02-19-19-49-33.jpg)