சூரி தற்போது செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கும் ‘மண்டாடி’ படத்தில் நடித்து வருகிறார். இதைத் தவிர்த்து ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் முன்னதாகவே அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் ரிலீஸாவதில் தாமதம் நீடிக்கிறது. 

Advertisment

இந்த நிலையில் சூரி சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் தீபாவளி கொண்டாட்ட வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில் குடும்பத்துடன் மகிழ்ச்சி பொங்க அவரது வீட்டில் கொண்டாடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதை பார்த்த ஒருவர், “திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை” என கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த சூரி, “திண்ணையில் இல்லை நண்பா. பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்… அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்” என பதிவிட்டிருந்தார். 

Advertisment

இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு பயனருக்கு தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது கரூர் சம்பவம் தொடர்பாக விஜயை சூரி விமர்சிப்பது போல் ஒரு செய்தி இணையத்தில் உலா வந்துக் கொண்டிருக்க அதை பகிர்ந்த ஒரு பயனர், விஜயை சூரி விமர்சித்துவிட்டார் என்று பொருள்படும் வகையில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த சூரி அவர் பகிர்ந்த செய்தி தவறானது என்றும் விளக்கி அறிவுரை வழங்கியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “தம்பி, தவறான தகவலைப் பரப்புவது எப்போதும் சமூகத்துக்கு தீங்கையே தரும். ஆகையால் நம்முடைய ஒவ்வொரு செயலிலும் நிதானமும் முதிர்ச்சியும் காட்டுவோம்.

இந்த சமூகம் நல்ல மாற்றங்களைப் பெற தகுதியானது, அதனால் நன்மையும் அன்பும் பரப்புவதில் உங்கள் சிறந்ததைச் செய்யுங்கள். எனக்கும் பல வேலைகள் உள்ளன, உங்களுக்கும் செய்ய வேண்டியவை இருக்கின்றன. ஆகையால் இப்போது நம்முடைய பணிகளில் முழு கவனம் செலுத்துவோம்” எனறுள்ளார். சூரியின் இந்த அறிவுரை கலந்த பதிலடிகள் இணையத்தில் பலரது பாராட்டை பெற்றுள்ளது. 

Advertisment