அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஸ் காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், ரெய்ச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சூரி, “இந்தப் படத்தின் காட்சிகள் அனைத்தையும் நாமும் எதிர்கொண்டிருப்போம். படம் முழுக்க நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு பெண் தனக்கான உரிமையை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என பன்ச் டயலாக் பேசாமல் காட்சிகள் மூலம் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இந்தப் படம் பார்க்கும்போது என் அம்மா நியாபகம் வந்தது. யாருமே தவற விடக்கூடாத படம் இது. பெரிய விஷயத்தை அசால்டாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார் சிவா.
நாற்பது வருடங்களுக்கு மேலான தனது அனுபவத்தை இந்தப் படத்தில் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார் ராதிகா மேம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ‘நான் நடிக்கிற படங்களில் எல்லாமும் திணிக்க முடியாது. ஆனால், நான் தயாரிக்கிற படங்கள் இந்த சமூகத்திற்கு தேவையானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்’ என தம்பி சிவகார்த்திகேயன் சொல்வார். அதைத்தான் எல்லா படங்களிலும் செய்து வருகிறார். அவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/24/04-14-2026-02-24-18-35-58.jpg)