செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கும் இப்படத்தை வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கடலில் நடக்கும் படகு போட்டியை மைய்யமாகக் கொண்டு உருவாகிறது. இதனால் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கடல் பகுதிகளில் படமாக்கப்படுகிறது. அந்த வகையில் இராமநாதபுர கடலில் கடந்த அக்டோபர் மாதம் படப்பிடிப்பு நடந்தது. இப்போது அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில், சூரியை குறிப்பிட்டு “அண்ணா உங்கள் பட சூட்டிங் எங்கள் ஊரில் நடப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே. இரவு நேர படப்பிடிப்பில் வேடிக்கை பார்க்க வரும் எங்கள் பகுதி மக்களிடம் உங்களது பவுசன்கர்கள் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்.
தயாரிப்பு நிறுவனத்திடம் கொஞ்சம் சொல்லி வைக்கவும் நன்றிகள்” என கேட்டுக்கொண்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த சூரி, “தம்பி, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி! படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதை தயாரிப்புக் குழுவிடமும், பவுன்சர்ஸ் சகோதரர்களிடமும் தெரிவித்து இனி மிகுந்த கவனத்துடன் இருக்கச் சொல்கிறோம். எப்போதும் போல உங்கள் அன்பே எங்களுக்கு பலம். மீண்டும் நன்றி” என ரிப்ளை செய்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/06/18-30-2025-12-06-12-57-55.jpg)