சூரி தற்போது செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கும் ‘மண்டாடி’ படத்தில் நடித்து வருகிறார். இதைத் தவிர்த்து ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் முன்னதாகவே அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் ரிலீஸாவதில் தாமதம் நீடிக்கிறது. 

Advertisment

இந்த நிலையில் அஜித்தை சூரி சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சூரி, “அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது - உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது. 

Advertisment

அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது…” எனக் குறிப்பிட்டுள்ளார். இருவரும் வேதாளம் படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.