தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினியும் கமலும் ஆரம்பக்காலத்தில் ஒரே படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், பதினாறு வயதினிலே மற்றும் நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களும் இந்த லிஸ்டில் அடங்கும்.
இதையடுத்து இருவரும் 47 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் இயக்குகிறார். அவரது ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியை கமலையும் ரெட்ரோ கெட்டப்பில் பார்த்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் இந்த ப்ரோமோ குறித்து எஸ்.ஜே.சூர்யா தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, “வாவ்... என்ன ஒரு ஐகானிக் மொமெண்ட். ரெண்டு tycoons-um ஒன்னா நடந்து வர்றது... கண்கொள்ளா காட்சி. நெல்சன் திலீப் குமார், என்ன ஒரு ப்ரெசெண்டேஷன். அனிருத், நீங்கள் எப்போதுமே ராக்ஸ். ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஒரு பெருமையான தருணத்தை உருவாக்கியிருக்கு” என்றுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/23/15-67-2026-02-23-17-33-00.jpg)