அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஸ் காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், ரெய்ச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். 

Advertisment

இப்படம் வரும் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன், “தாய் கிழவி படக்குழுவினர் அனைவருக்கும் வணக்கம். அடுத்து தலைவர் படம் இயக்க இருக்கும் சிபிக்கும் வணக்கம். நாம் இருவரும் சேர்ந்து சுதனுடன் படம் செய்யவதாக இருந்தது. நீ மட்டும் இப்போது எஸ்கேப். சினிமாவில் சின்ன கதாபாத்திரத்தில் ஆரம்பித்து மக்கள் என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள். சினிமாவில் வெற்றி பார்த்து பின்பு என் குடும்பம் நன்றாக இருந்தது. இருந்தாலும் என்னுடைய நண்பர்களுக்கும் எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. என்னைவிட சினிமாவில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவன் அருண்ராஜா. அவர் சொன்னதுபோல, அவருக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ். கனவோடு திருச்சியில் இருந்து வந்தவர்கள் சேர்ந்து ‘கனா’ என்ற படத்தை எடுத்தோம். பின்பு ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘டாக்டர்’, ‘டான்’, ‘கொட்டுக்காளி’, ‘குரங்கு பெடல்’ என பல படங்கள் தயாரித்தோம். ’கொட்டுக்காளி’ படத்தின் வெற்றி எனக்கு நிறைவாக இருக்கிறது. ’தாய் கிழவி’ கதை கேட்டதுமே சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். 

Advertisment

’தாய் கிழவி’ பார்த்துவிட்டு இந்தப் படத்தில் நிறைய நட்சத்திரங்களை உருவாக்கி இருக்கிறீர்கள் என கமல் சார் சிவகுமாரிடம் சொன்னார். ’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா மேம் தவிர வேறு ஆள் கிடையாது என்பதை படம் பார்த்துவிட்டு அனைவரும் சொல்வார்கள். ’சேயோன்’ படத்திற்கு அடுத்தும் மீண்டும் நான் சிவாவுடன் தான் படம் செய்ய இருக்கிறேன். எனக்கு பேரும் புகழும் கொடுத்த இந்தத் துறைக்கு நான் திரும்ப எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறேனே தவிர யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி வர வேண்டும் என்ற எண்ணத்திலோ இல்லை. நான் நடிக்கும் படங்களின் வெற்றி, தோல்விக்கு நானும் பொறுப்பு என்பதை உணர்ந்தே செயல்படுகிறேன்.      

மக்கள் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால், இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தடை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி வர நான் ரெடி” என்றார்.  

Advertisment