கேரளா கொச்சியில் தென்னிந்திய சினிமாவுக்கான 70வது ஃபிலிம் ஃபேர் விருது விழா நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசை ஆல்பம், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த பின்னணி பாடகர், சிறந்த பின்னணி பாடகி உள்ளிட்ட 8 பிரிவுகளில் விருதுகள் வென்றுள்ளது.
சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற சிவகார்த்திகேயன், சிம்ரன் கையால் விருதை பெற்றுக் கொண்டார். பின்பு பேசிய அவர், “இது என்னுடைய முதல் ஃபீலிம் ஃபேர் விருது. 13 வருஷம் முன்னாடி தனுஷ் சாருடன் இந்த விருதுக்கு வந்தேன். வா ஜாலியா போகலாம்னு சொன்னார். அப்போது செகண்ட் ரோவில் தான் எனக்கு சீட் கிடைத்தது. ஃபர்ஸ்ட் ரோவில் உட்கார 13 வருஷன் ஆகியிருக்கு.
கோவா ஃபிலிம் ஃபெஸ்டிவல்ல அமரன் போகும்போது இந்த படம் எனக்கு நிறைய கொடுத்த்ருக்கு. இன்னும் கொடுத்துட்டே இருக்கும்னு சொன்னேன். அதை கொடுத்துட்டே இருக்கிற மேஜர் முகுந்த் சார் குடும்பத்துக்கு ரொம்ப பெரிய நன்றி. அவர் தான் காரண, இந்த படத்தை இப்படி கொண்டாடுவதற்கு. இயக்குநர், ஆர்டிஸ்ட், டெக்னீஷியன் எல்லாருக்கும் நன்றி.
புரொடியூசர் கமல் சாருக்கு நன்றி. அவர் அவ்ளோ ஃபிலிம் ஃபேர் விருது வாங்கியிருக்கார். இனிமே எனக்கு வேண்டாம் மத்த திறமையான கலைஞர்களுக்கு கொடுங்கன்னு சொல்ற அளவுக்கு அவ்ளோ வாங்கியிருக்கார். முதன் முதலா இந்த படத்துக்கு சைன் பண்ண போகும்போது அவர் ஆஃபிஸ்ல நிறைய ஃபிலிம் ஃபேர் விருது இருந்துச்சு. அந்த விருது இந்த படத்துக்கும் வாய்பிருக்குன்னு நினைச்சேன். அது போல கிடைச்சிருச்சு. சிம்ரன் மேடமிடமிருந்து விருது வாங்கியது ரொம்ப ஸ்பெஷல்.
நான் ரொம்ப ஜாலியான ஆளு. நீயேம்பா இந்த ரோல்ல நடிக்கறன்னு கேட்காம, நல்லா பண்ணியிருக்கன்னு ஏத்துக்கிட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்றி. முக்கியமா என்னுடைய ரசிகர்களுக்கு. என்னை எவ்ளோதான் தான் மத்தவங்க எதிர்த்தாலும், கீழ தூக்கி போட்டு மிதிச்சாலும் என்னை தூக்கி தூக்கி மேடை ஏற வச்சிக்கிட்டே இருக்கீங்க. இன்னும் உழைக்கனும்னு தோனிட்டே இருக்கு. கண்டிப்பா அத செய்வேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/23/20-64-2026-02-23-11-43-02.jpg)