‘அமரன்’ பட வெற்றிக்கு பிறகு கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘சேயோன்’. இப்படத்தை ‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் 26வது படமாக உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 16ஆம் தேதி மாலை வெளியாகியிருந்தது. அதில் மயில் சூழ அதன் தோகை மீது கையில் பெரிய அரிவாளுடன் சிவகார்த்திகேயன் உட்கார்ந்திருந்தார். இதனை தொடர்ந்து அடுத்த நாளான 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால் படத்தின் ஒரு முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டது. 

Advertisment

அதில் விருமாண்டி சாமியாக புது தோற்றத்தில் சிவகார்த்திகேயன் தோன்றியிருந்தார். இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் காமெடி கலந்த படமாக உருவாகுவது போல் தெரிகிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. படம் வரும் அக்டோபரில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிபிராஜ் நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான ‘மாயோன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ், தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்துள்ளது. அதில் ‘மாயோன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ‘சேயோன்’ என தலைப்பு வைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறி அப்படத்தை தலைப்பை யாரும் பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது.