‘அமரன்’ பட வெற்றிக்கு பிறகு கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘சேயோன்’. இப்படத்தை ‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் 26வது படமாக உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியாகியிருந்தது. அதில் மயில் சூழ அதன் தோகை மீது கையில் பெரிய அரிவாளுடன் சிவகார்த்திகேயன் உட்கார்ந்திருந்தார். இதனை தொடர்ந்து இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால் படத்தின் ஒரு முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் மதுரை கதைகளத்தில் ஊர் திருவிழாவின் போது சண்டைகள் நடக்க அதற்கு போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து நடப்பது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனிடையே விருமாண்டி சாமியாக வரும் சிவகார்த்திகேயன் தான் இதற்கு காரணம் என தெரிய வர அவரை வழி மறிக்கிறது ஒரு கும்பல். அவர்களை தாக்கி மதுரை வட்டார மொழியில் ‘வரண்டியேய்’ என சிவகார்த்திகேயன் சொல்ல முன்னோட்டம் முடிகிறது. இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் காமெடி கலந்த படமாக உருவாகுவது போல் தெரிகிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. படம் வரும் அக்டோபரில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/17/16-59-2026-02-17-18-03-58.jpg)