ஃபேன்லி(Fanly) என்ற செயலியின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் புல்லேலா கோபிச்சந்த், லட்சுமி நாராயணன், குகேஷ் தம்மராஜு, மணிகண்டன் தங்கரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “இந்த மேடையை பகிர்ந்து கொண்ட மூன்று பேருக்குமே மூளை ஜாஸ்தி. எனக்கு தான் கம்மினு நினைக்கிறேன். அதனால தான் நான் நடிகராக இருக்க முடியுது. மூளை கொஞ்சம் ஜாஸ்தியா இருந்தா டைரக்டரரை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிருப்பேன். அவங்க சொல்றத கேட்டு நடிக்கிறதே மூல கம்மியா இருக்கிறதுனால தான்.
என்னுடைய ரசிகர்களை நான் எப்போதும் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்ன்னு தான் சொல்லுவேன். ஏன்னா அவங்கள நான் ஒரு ஃபேமிலியா தான் பாக்குறேன். இந்த ஃபேமிலி செயலியை சொல்லும் போது ஃபேமிலின்னு தான் எனக்கு சொல்ற மாதிரி இருக்கு. இவங்க சொன்ன ஐடியா என்னன்னா, ரொம்ப நெகட்டிவிட்டி அதிகமா இருக்குற இந்த காலகட்டத்துல அதை பில்டர் பண்ணி ரொம்ப பாசிட்டிவான விஷயங்கள ரசிகர்கள்கிட்ட கொடுக்கனும்னு சொன்னாங்க. அது ரொம்ப நல்ல விஷயம். நான் எப்போதுமே ரசிகர்கள், அவங்க கவனத்தை சிதற கூடாதுன்னு நினைப்பேன்.
நான் எப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கணும்னு ஆசைப்படுறேன்னா, என்னை வழிபடுற ஃபேன்ஸா இருக்கக்கூடாது. அவங்க வணங்க வேண்டியது கடவுளையும் அவங்க அப்பா அம்மாவையும் தான். என்கிட்ட நண்பர்கள் போல பேச, ஒரு பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் போல பழகுற மாதிரி தான் ரசிகர்கள் இருக்கனும். அதனால தான் எப்போதுமே நான் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்னு என் ரசிகர்களை சொல்லுவேன். அதுக்கு ஏத்த மாதிரி இந்த செயலி இருக்கு. எல்லாரும் சொல்ற மாதிரி சோசியல் மீடியாவை பார்த்தா இப்போ ஒரு பயம் வருது. அதுக்குள்ள போயி எதுக்கு தேவையில்லாத விஷயத்தை எடுத்துக்கிட்டுன்னு நான் அதுக்குள்ள போறதே இல்ல. எல்லா சோசியல் மீடியாவிலும் நான் அக்கவுண்ட் வச்சிருக்கேன். ஆனா அத வேற ஒருத்தர் தான் மேனேஜ் பண்றார். இன்ஸ்டாகிராம் மட்டும், நான் அப்பப்போ மேனேஜ் பண்ணுவேன். அதுலையும் சில சமயம் எனக்கே தெரியாம ரீ போஸ்ட் பண்ணிடுவேன். அதுக்கு பயந்துகிட்டே இப்போ அதையும் யூஸ் பண்றது இல்ல” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/02/19-30-2025-12-02-16-21-31.jpg)