Advertisment

‘லோக்கல் டான்னு டா... சூப்பர் மேனுடா...’ - சிவகார்த்திகேயன் குரலில் வெளியான பாடல்

14 (56)

சிவகார்த்திகேயன், ‘பராசக்தி’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதன் முன் தயாரிப்பு பணிகளும் நடந்து வருகிறது. இதனிடையே ‘சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ்’ எனும் பேனரில் படங்களை தயாரித்தும் வழங்கியும் வருகிறார். அந்த வகையில் கடைசியாக ‘ஹவுஸ்மேட்ஸ்’ படத்தை வழங்கியிருந்தார். தயாரிப்பாளராக ‘கொட்டுக்காளி’ படத்தை தயாரித்திருந்தார். இந்த சூழலில் அவர் புதிதாக தயாரித்து வழங்கும் படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ளார். ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisment

மேலும் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஸ் காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், ரெய்ச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. அதில் வயதான பாட்டி தோற்றத்தில் ராதிகா சரத்குமார் தோன்றியிருந்தார். ஒரு கிராமத்தில் அவர் வட்டி வசூலிக்கும் கரார் பாட்டியாக இருக்கும் நிலையில் அவரை சுற்றி என்ன நடக்கிறது என்பதை காமெடி எமோஷனல் கலந்து படம் உருவாகியிருப்பது போல் டீசர் உணர்த்தியிருந்தது. 

Advertisment

இதனை அடுத்து ராதிகா சரத்குமார் அவர் ஏற்று நடித்த அந்த பாட்டி கதாபாத்திரத்திற்காக தயாரான மேக்கிங் வீடியோ வெளியானது. அதில் ராதிகாவின் அர்ப்பணிப்பை கண்டு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து முதல் பாடல் அப்டேட் வெளியாகியிருந்தது. அதாவது ‘தாய் கிழவி வாரா’ எனும் தலைப்பில் சிவகார்த்திகேயன் குரலில் இப்பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இப்பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கு கருமாத்தூர் மணிமாறன் வரிகள் எழுதியுள்ளார். கறார் பார்டி என்பதை குறிக்கும் வகையில் ‘தாய்கிழவி லோக்கல் டான்னு டா... இவ சுங்குடிச் சீல கட்டி வந்த சூப்பர் மேனுடா’ போன்ற வரிகளும் இடம் பெற்றுள்ளது. அவரது கதாபாத்திரத்தை விவரிக்கும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. பிப்ரவரி 20-ஆம் தேதி இப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Raadhika sarathkumar actor sivakarthikeyan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe