இந்தாண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொங்கல் வெளியீடான ‘பராசக்தி’ படம், கடந்த 10ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருந்த இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். அதே போல் சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம்.
இப்படம் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த மாணவர்களின் போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் இரண்டு நாளில் உலகளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இந்த நிலையில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஐந்தாவது முறையாக சிவகார்த்திகேயன் படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
முன்னதாக டாக்டர் படம் முதல் படமாக ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. தொடர்ந்து ‘டான்’ படமும் ‘அமரன்’ படமும் அடுத்து வெளியான ‘மதராஸி’ படமும் அடுத்தடுத்து இணைந்தது. இதனை தொடர்ந்து தற்போது பராசக்தி படமும் ரூ.100 கிளப்பில் இணைந்துள்ளது.
Follow Us