சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். 1960களின் வரலாற்றுப் பின்னணியில், உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் படத்தில் பயன்படுத்தப்பட்ட 60களின் கார்கள், ரயில் நிலைய செட் என பல்வேறு விஷயங்கள் அடங்கிய ஒரு கண்காட்சியை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கினர். இது இன்றுடன் முடிகிறது.
இப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் நடிக்கள்ளார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. நேற்று இரவு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மத்திய கைலாஷ் அருகே அவருடைய கார் முன்னாள் சென்ற காரின் மீது லேசாக மோதியது.
விபத்தின் போது சிவகார்த்திகேயன் உள்ளே உட்காந்திருந்தார். அவர் உட்பட ஓட்டுநர் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த சிறு விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சிறிது கூட்டம் கூடி பரபரப்பு ஆனது. பின்பு போக்குவரத்து காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை செய்து கூட்டத்தை கலையவைத்தனர்.
Follow Us