தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் கடைசியாக பராசக்தி படத்தில் நடித்திருந்தார். பொங்கல் முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
சினிமாவை தாண்டி அவ்வபோது விலங்குகளை தத்தெடுத்து வளர்க்கும் பழக்கத்தை கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் யானை மற்றும் சிங்கத்தை தத்தெடுத்து வளத்திருந்தார். பின்பு கடந்த ஆண்டு ஒரு சிங்கத்தையும் புலியையும் மூன்று மாதங்களுக்கு தத்தெடுத்து வளர்த்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது பிரக்ருதி என்ற யானையை 6 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார். யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அவர் வழங்கவுள்ளார். சென்னை உயிரியல் பூங்காவில் விலங்குகளை தத்தெடுப்பதற்கும் பராமரிப்பதற்கும் பூங்கா நிர்வாகம் சார்பில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட வருவது குறிப்பிடத்தக்கது.
Follow Us