சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியான படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் ரவிமோகன் வில்லனாகவும் ஶ்ரீலீலா நாயகியாகவும் அதர்வா முரளி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். அதே போல் சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம்.
இப்படம் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த மாணவர்களின் போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை எதிர்கொண்ட இப்படம் வசூலில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை கடந்திருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 7ஆம் தேதி ‘ஜீ5’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது தொடர்பாக ஜீ5 நிறுவனம் வெளியிட்ட வீடியோவில், சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “பராசக்தி படத்தை எல்லாரும் தியேட்டர்ல பார்த்து என்ஜாய் பண்ணியிருப்பீங்க. இப்போது அது ஜீ5ல வரப்போது. இன்னைக்கு நம்ம எல்லாரும் சுதந்திரமா தமிழ் மொழி பேசிக்கிட்டு இருக்கோம்னா அதுக்கு அப்போ நிறைய பேர் போராடுனதும் அவங்க உயிர கொடுத்ததும் தான் காரணம். அது எப்பேற்பட்ட தியாகம் அப்பிடிங்குறத தெரிஞ்சிக்க இந்த படத்த பாருங்க” என்றுள்ளார்.
Follow Us