டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. 1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். அதே போல் சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம். அடுத்த மாடம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ஆனால் 10ஆம் தேதியே முன்கூட்டியே வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது.
கடந்த 19ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தில் 60களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட கார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால அத்தியாவசிய பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் படக்குழுவினர் உயிர்ப்பித்தனர். இந்த கண்காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த கண்காட்சி தொடர்பாக படக்குழுவினர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் படக்குழுவினர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் பேசும் போது, “இந்தக் கதையை முழுதாக படித்தவுடன் செழியன் என்ற கேரக்டரின் பெயர் பிடித்து விட்டது. அந்த கேரக்டரை சே.. சே.. என எல்லாரும் கூப்பிடும்போது அது இன்னும் பவர்ஃபுல்லாக இருந்தது. அந்த கேரக்டர் ஆரம்பிக்கிற விதம், அவனுடைய எமோஷன், இலக்கு இதையெல்லாம் தாண்டி என்டர்டெயின்மென்ட் செய்யக்கூடிய இடம் இக்கதையில் இருந்தது. மாணவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள், அவர்களுடைய முன்னெடுப்பு எவ்வளவு பலம் வாய்ந்தது என்பதை இப்பாம் சொல்லும்.
இப்படி ஒரு ஸ்கிரிப்ட் இருக்கும்போது ஒரு ஹீரோவாக நான் ஏன் யோசிக்க வேண்டும். அதுவும் நம்முடைய மண் சார்ந்த, மொழி சார்ந்த படம். இது ஒரு சரியான கமர்சியல் படம். உங்களுக்கு என்னென்ன வேணுமோ எல்லாமே இருக்கும். அதையும் தாண்டி ஒரு பவர்ஃபுல்லான விஷயமும் இருக்கிறது. தியேட்டரில் பார்ப்பதற்கு நல்ல அனுபவமாக இருக்கும். எனக்கு சந்தோஷமான பெருமையான விஷயம் இந்த படம் எனக்கு 25வது படம்” என்றார்.
Follow Us