பொங்கலை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் மற்றும் பராசக்தி படத்தில், பராசக்தி திட்டமிட்டப்படி இன்று வெளியாகியுள்ளது. ஆனால் தணிக்கை சான்று கிடைக்காமல் தள்ளி சென்றுள்ளது. இது தொடர்பாக படத் தயரிப்பு நிறுவனமும் தணிக்கை வாரியமும் தங்களது தரப்பு நியாயங்களோடு தனித்தனியாக நீதிமன்றத்தை அணுகி வருகிறது. விரைவில் இதற்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தணிக்கை வாரியம் மத்திய அரசுக்கு கீழ் இயங்குவதால் மத்தியில் இருக்கும் பாஜக அரசு தான் வேண்டுமென்றே சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. அதே போல் அதிகாரத்தின் துஷ்பிரயோகம் என திரை வட்டாரத்திலும் விஜய்க்கு ஆதரவாக பெரும் ஆதரவு பெருகியுள்ளது.
இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள பராசக்தி படத்தை சிவகார்த்திகேயன், ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, அவரிடம் ஜன நாயகன் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஜன நாயகன் படம் என்னைக்கு வருதோ கண்டிப்பா அன்னைக்கு எல்லாருக்கும் கொண்டாட்டம் தான். ரசிகர்களை தாண்டி சினிமாவுக்கும் தியேட்டருக்கும் இந்த படம் ரொம்ப முக்கியம். சீக்கிரம் வரும் என நம்புறேன். நல்லதே நடக்கும்” என்றார்.
Follow Us