சிவகார்த்திகேயன், ‘பராசக்தி’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதன் முன் தயாரிப்பு பணிகளும் நடந்து வருகிறது. இதனிடையே அவர் தயாரிப்பில் ‘தாய் கிழவி’ படம் வரும் 20ஆம் தேதி வெளியாகிறது. 

Advertisment

இந்த நிலையில் சிவகார்த்திகேயன், சினிமாவில் 14ஆண்டுகளை கடந்துள்ளார். அவர் நாயகனாக அறிமுகான மெரினா படம் கடந்த 3ஆம் தேதியுடன் 14ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த சூழலில் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அங்கு தனது இரண்டு மகன்களுக்கும் மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “சினிமாவில் 14 வருஷம் என்பதை எல்லாரும் கொண்டாடுறாங்க. அவங்க அன்புக்கு நன்றி. ஒவ்வொரு வருஷமும் கூடும் போது பொறுப்பு தான் அதிகமாகிட்டே போகுது. இன்னும் நல்ல பண்ணனும்னு தோனிட்டே இருக்கு. இந்த பயணத்துல நிறைய கஷ்டங்கள், போராட்டங்கள் இருக்கு. ஆனா அதையும் தாண்டி மக்கள் கொடுத்த அன்பை தான் நான் பார்க்குறேன். அதுக்காக இன்னும் உழைக்கனும்னு தோணுது” என்றார். 

Advertisment

பின்பு அடுத்த படம் குறித்து பேசிய அவர், “கதை, டைரக்டர், தயாரிப்பாளர் என அனைத்தையுமே லாக் செய்துவிட்டோம். சீக்கிரமே அதுக்கான அறிவிப்பு வரும். அந்த படம் எல்லாருமே என்கிட்ட இருந்து எந்த மாதிரியான ஒரு படம் வேணுனு எதிர்பார்க்குறாங்களோ அந்த மாதிரியான படமா இது நிச்சயம் இருக்கும். குழந்தைங்க முதல் பெரியவங்க வரை, ரசிகர்களும் உட்பட அனைவருக்கும் பிடிக்குற மாதிரி அந்த படம் இருக்கும்” என்றார். 

சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு படத்திற்கு முன் தாய் கிழவி பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாகவும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு தகவல் உலா வருகிறது. அந்த படத்தின் அறிவிப்பு தான் சிவகார்த்திகேயன் கூறியது போல் விரைவில் வெளியாகவுள்ளதாக ரசிகர்கள் யூகிக்கின்றனர்.  

Advertisment