பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஸ் காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், ரெய்ச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் படக்குழு முதல் நாள் முதல் காட்சியை மதுரையில் ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்துள்ளது. பின்பு செய்தியாளர்களை சந்தித்து தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளது. அப்போது சிவகார்த்திகேயனிடம் அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் சின்னதாக தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறேன். வளர்ந்த பிறகு அஜித் சார் ஓகே சொன்னால் நிச்சயம் பண்ணுவோம். அந்தப் படம் கண்டிப்பாக அவரது ரசிகர்களுக்கு திருவிழாவாக இருக்கும். அது இப்போதைக்கு கனவாக தான் இருக்கிறது” என்றார்.
அஜித்துடன் தொடர்ந்து நட்போடு பழகி வரும் சிவகார்த்திகேயன் அவ்வபோது அவரை நேரில் சந்தித்து பேசி வருவார். கடைசியாக அபுதாபியில் நடந்த கார் ரேஸ் ட்ராக்கில் அஜித்தை சந்தித்திருந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/27/13-49-2026-02-27-16-29-25.jpg)