கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கடைசியாக ‘அமரன்’ படத்தை தயாரித்திருந்தது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. பின்பு கமல் நடித்த தக் லைப் படத்தை மணிரத்தினத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தது இப்படம் பெரிய வசூலை ஈட்டவில்லை.

Advertisment

இதனைத் தொடர்ந்து ரஜினியின் 173வது படமாக உருவாகும் இப்படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். இப்படத்தை தொடர்ந்து ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தை இந்நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இந்நிறுவனம் தயாரிப்பதாகவும் ‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குவதாகவும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் 26வது படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘சேயோன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவகார்த்திகேயன் சாமி பக்தி கொண்ட கதாபாத்திரமாக கையில் பெரிய அறுவாலுடன் உட்காந்திருக்கிறார். மேலும் முருகனின் வாகனம் என சொல்லப்படும் மயில் தோகை சூழ உட்கார்ந்திருக்கிறார். இப்படம் முருகனை மையப்படுத்தி உருவாக்கபப்டுவதாக தெரிகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் ‘வீரம் உண்டு வெற்றி உண்டு’ என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளது. மேலும் படத்தின் கொண்டாட்டம் நாளை காலை 10 மணி முதல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அமரன் பட வெற்றிக்குப் பிறகு மீண்டும் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

Advertisment