சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் வழங்க, தயாரிப்பாளர்களாக செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் இணைந்து தயாரிக்க டி. டி. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லெனின் பாண்டியன்’. 

Advertisment

இப்படத்தில் பல முக்கியமான நட்சத்திரங்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் கங்கை அமரன், நடிகை மற்றும் அரசியல்வாதியான ரோஜா நடிக்கிறார். இதன் மூலம் ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழ் திரையுலகில் திரும்பி வருகிறார். இவர்களுடன் தர்ஷன் கணேசன், ஷ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றனர். 

Advertisment

இப்படத்தின் நாயகன் சிவாஜி கணேசனின் பேரன் ஆவார். இவர் தற்போது ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இந்த சந்திப்பில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், மேலும் ராம் குமார் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.