அஜித்குமார் கடைசியாக ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.   

Advertisment

இதனிடையே அஜித் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.  இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை உருவாக்கிய அவர், துபாய் தொடங்கி போர்ச்சுக்கல் வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் துபாய் மற்றும் ஸ்பெய்னில் நடந்த போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்திருந்தார். மற்ற போட்டிகளில் கவனிக்கத்தக்க இடங்களை பிடித்திருந்தார்.  

Advertisment

இப்போது மலேசியாவில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்கிறார். இந்த ரேஸ் டிராக்கில் அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கிய சிறுத்தை சிவா உலா வருகிறார். அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதன் மூலம் அஜித்துக்கு கதை சொல்ல அங்கு சென்றுள்ளாரா மீண்டும் இவர்கள் கூட்டனி உருவாகவுள்ளதா என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். ஆனால் அவர் அஜித்தின் ரேஸ் அணிக்கு ஒரு விளம்பர படம் எடுக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் உலா வருகிறது.  

அதே போல் அஜித்துடன் இயக்குநர் ஏ.எல். விஜய்யும் இருக்கிறார். டிராக்கில் அஜித் ரசிகர்களிடம் கை காட்டி அன்பை தெரிவிக்க அது சம்பந்தமான வீடியோவில் ஏ.எல்.விஜய்யும் உடன் இருக்கிறார். அவர் கையில் கேமராவை வைத்துக்கொண்டு அஜித்தை வீடியோ எடுக்கும் காட்சிகள் அதில் இடம்பெறுகிறது. இவர் அஜித்தின் ரேஸ் குறித்து ஒரு ஆவணப்படம் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. 

Advertisment