தெலுங்கு திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி, இன்று தமிழ் சினிமாவிலும் முன்னணி இயக்குநராக இருந்து வருபவர் சிவா. 2011 ஆம் ஆண்டு தமிழில் ‘சிறுத்தை’ படத்தை இயக்கினார். கார்த்திக் மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து  வீரம் படத்தை இயக்கினார். அஜித் மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த கூட்டணி அடுத்தடுத்த படங்களை ஒப்பந்தம் செய்தது.  

Advertisment

அந்த வகையில் வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் போன்ற படங்கள் வெளியாகின. இந்த படங்களும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பதிவு செய்தன. தொடர்ந்து படங்கள் செய்து வரும் இக்கூட்டணி மக்களிடையே பிரபலமாகிப்போனது. கடைசியாக விஸ்வாசம் படத்திற்குப் பிறகு இன்றுவரை இந்த கூட்டணி மீண்டும் சேராமல் இருக்கிறது. இருப்பினும், அதற்கான பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் அது அடுத்தக்கட்டத்துக்கு நகராமல் போனது. 

Advertisment

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தித்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.  இந்த படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் சிவா கூட்டணி மீண்டும் இணையும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சிவாவிடம் அஜித்துடன் மீண்டும் கூட்டணியா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “எல்லாம் சரியாக அமைந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். கதை என்ன என்பதை ரகசியமாக வைத்துள்ளோம். உரிய நேரத்தில் வெளிப்படையாக அறிவிப்பு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.  இந்த கூட்டணியில் உருவாகவுள்ள ஐந்தாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா தற்போது அஜித் கார் ரேஸ் அனிக்கு ஒரு விளம்பர படத்தை இயக்கி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அஜித்துடன் ரேஸ் சர்க்யூட்டில் சிவா வலம் வரும் புகைப்படம் சமூக வலைதாங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Advertisment