திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது 1929ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 98வது ஆண்டு ஆஸ்கர் விழா மார்ச் 16ஆம் தேதி நடக்கிறது. 

Advertisment

இந்த விழாவிற்கான நாமினேஷன் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) பிரிவில் இந்திய சார்பில் போட்டியிட்ட இந்தி படமான ‘ஹோம்பவுண்ட்’(Homebound) இடம் பெறவில்லை. அதோடு சிறந்த திரைப்படப் பிரிவில் தனிப்பட்ட முறையில் போட்டியிட்ட  ‘டூரிஸ்ட் ஃபேமிலி’(தமிழ்), ‘காந்தாரா சாப்டர் 1’(கன்னடம்), ‘தான்வி தி கிரேட்’(இந்தி), ‘சிஸ்டர் மிட்நைட்’(இந்தி) மற்றும் அனிமேஷன் படமான ‘மஹாவதார் நரசிம்மா’ படங்களும் இடம் பெறவில்லை. 

Advertisment

இந்த நிலையில் நாமினேஷ் பட்டியலில் ‘சின்னர்ஸ்’ படம் அதிகபட்சமாக 16 பிரிவிகளில் இடம் பெற்றுள்ளது. 1930களில் அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் நிலவிய இனவெறியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம், சிறந்த பின்னணி இசை, சிறந்த அசல் பாடல், சிறந்த ஒலி அமைப்பு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த நடிகர் (இரட்டை வேடம்) ஆகிய பிரிவுகளில் போட்டியிடுகிறது. 

இதன் மூலம் ஆஸ்கர் வரலாற்றில் அதிக பிரிவுகளில் நாமினேஷன் செய்யப்பட்ட படமாக மாறியுள்ளது. இதற்கு முன்பாக ‘ஆல் அபௌட் ஈவ்’ (1950), ‘டைட்டானிக்’ (1997) மற்றும் ‘லா லா லேண்ட்’ (2016) ஆகிய படங்கள் தலா 14 பிரிவுகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தவிர்த்து ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ படம் 13 பிரிவுகளிலும் ‘மார்ட்டி சுப்ரீம்’, ‘சென்டிமென்டல் வேல்யூ’ மற்றும் ‘ஃப்ராங்கன்ஸ்டைன்’ ஆகிய படங்கள் தலா 9 பிரிவுகளில் இடம் பெற்றுள்ளது. 

Advertisment